என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேல்நிலை குடிநீர் தொட்டி"
- தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
- ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல்
திருவட்டார் :
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆனையாளர்கள் சசி, யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பீனாகுமாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் அனிதா குமாரி, ராம்சிங், ஜெபா, சகாய ஆன்றனி, ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொறியாளர்கள் சஞ்சிவ், பொன்ராஜன், கீதா, அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவட்டார் பேரூராட்சியில் அம்ருத் குடிநீர் திட்டத்திற்கு திருவட்டார் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை உடைத்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க இடம் அனுமதி வழங்குதல், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அயக்கோடு ஊராட்சியில் குறுக்குடி முதல் மனக்குன்று வரை ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலை அமைத்தல், கண்ணனூர் ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காப்பிகுளத்தில் பக்க சுவர் அமைத்தல், ஏற்றக்கோடு ஊராட்சியில் கூற்றவிளாகம் பகுதியில் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந் தகுடி மேலையூர் கிராமம் சொக்கன்தொண்டார் காலனி பகுதியை சேர்ந்தவர் சவுந்திரன். இவரது மகள் சத்யா (வயது 16). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி சத்யா, சமீபத்தில் நடந்த தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சவுந்திரன், மகளை கண்டித்து பேசினார். இதில் சத்யா மனமுடைந்து வேதனையுடன் இருந்து வந்தார்.
இதையடுத்து இன்று காலை 7.30 மணியளவில் சத்யா, வீடு அருகே உள்ள 100 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறினார்.
பின்னர் தொட்டியின் உச்சிக்கு சென்ற அவர் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார். இதில் சத்யாவுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடி அலறினார். சத்யாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர். பிறகு அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ் - 2 மாணவி குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சி 32 வார்டு ஆரிப் நகரில் குடிநீர் பிரச்சனை உள்ளது என அப்பகுதி மக்கள் நல்லதம்பி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து நல்லதம்பி எம்.எல்.ஏ., குடிநீர் வடிகால் வாரிய செயலாளர் பிரகாசை சந்தித்து மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆரிப் நகரில் ரூபாய் 50 லட்சம் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டவும் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கீழே தேக்கிவைக்க நீர்த்தேக்கத் தொட்டியும் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஆரிப் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பணி மேலாளர் அன்பரசு இளநிலை பொறியாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் எஸ்.அரசு முன்னாள் கவுன்சிலர்கள் சவுத்அகமத் ஸ்ரீதர் கமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஒப்பந்ததாரர் சேகர் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் நீண்டநாள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட கோரிய கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.
இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமானநிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்